தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆதார் சிறப்பு முகாம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆதார் சிறப்பு முகாம்
ஆதார் சிறப்பு முகாம்

தஞ்சை கோட்ட முதுநிலை தபால் கண்காணிப்பாளர் தங்க மணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தஞ்சை தபால் கோட்டத்தின் சார்பில் ஆதார் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாளை (திங்கட்கிழமை) திருக்கருகாவூரிலும், 12- ஆம் தேதி மாணிக்கமங்கலத்திலும், 13-ஆம் தேதி நடுக்காவேரி, வாண்டை யார் இருப்பு, மெலட்டூர் ஆகிய இடங்களிலும், 14-ஆம் தேதி தஞ்சை கமலா சுப்பிரமணியம் பள்ளி மற்றும் மாத்தூரிலும், 15- ஆம் தேதி திருக்காட்டுப்பள்ளி, கருவாக்குறிச்சி, திருக்கானூர் பட்டியிலும் ஆதார் சிறப்பு முகாம் நடக்கிறது.

18-ஆம் தேதி மருங்குளம், கபிஸ்தலம், திருக்களார் ஆகிய இடங்களிலும், 19-ஆம் தேதி பசுபதிகோவில், மூவாநல்லூரிலும், 21-ஆம் தேதி செண்பகாம்பாள்புரம், திருவையாறு, புள்ளமங்கலம், தென்பரை, கல்விராயன்பேட்டை, வலங்கைமானிலும், 22-ஆம் தேதி கருப்புக்கிழார், கள்ளப்பெரம்பூரிலும், 23-ஆம் தேதி கல்யாண புரத்திலும், 26-ஆம் தேதி வேதியபுரம், பெரம்பூர், கொக்கேரியி லும், 27-ஆம் தேதி கருணாவூர், திருக்கருகாவூர், குளிச்சப்பட்டி லும், 28-ஆம் தேதி சாத்தனூரிலும், 29-ஆம் தேதி திருப்பூந்துருத்தி, கூப்பாச்சிகோட்டை, இரும்புதலை, புள்ளபூதங்குடியிலும் ஆதார் சிறப்பு முகாம் நடக்கிறது. ஆதாரில் கைரேகை திருத்தம் செய்வது 5 முதல் 7 வயது மற்றும் 15 முதல் 17 வயதுகளில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த வயதுகளில் உள்ளவர்களுக்கு மட்டும் பயோமெட்ரிக் திருத்தம் இலவசமாக செய்யப்படுகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் ஆதார் சிறப்பு முகாமை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story