பட்டுக்கோட்டை அஞ்சல் கோட்டத்தில் ஆதார் சிறப்பு சேவை முகாம்

பட்டுக்கோட்டை அஞ்சல் கோட்டத்தில் ஆதார் சிறப்பு சேவை முகாம்

பட்டுக்கோட்டை அஞ்சல் கோட்டத்தில் ஆதார் சிறப்பு சேவை முகாம் நடைபெற்றது.


பட்டுக்கோட்டை அஞ்சல் கோட்டத்தில் ஆதார் சிறப்பு சேவை முகாம் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அஞ்சல் கோட்டத்தில் ஆதார் சிறப்பு சேவை முகாம் நடைபெற்று வருகிறது என அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கஜேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பட்டுக்கோட்டை அஞ்சல் கோட்டத்தில் உள்ள 26 ஆதார் சேவை மையங்களில் ஆதார் சிறப்பு சேவை முகாம் கடந்த 5-ஆம் தேதி தொடங்கியது. இந்த முகாம் அடுத்த மாதம் (ஜூலை) 5- ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதில் ஆதார் புதிதாக எடுக்க கட்டணம் இல்லை. இதற்கு குழந்தையின் அசல் பிறப்பு சான்றிதழ், பெற்றோரின் ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை கொண்டு வரவேண்டும். பெயர் மாற்றம், பிறந்த தேதி மாற்றம், முகவரி மாற்றம் செய்ய ரூ.50, புகைப்படம் மற்றும் கைரேகை மாற்ற ரூ.100 கட்டணம் வசூலிக்கப்படும் பெயர் மாற்றம் செய்ய பாஸ்போர்ட், பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய திருமண சான்றிதழ், புகைப்படத்துடன் பென்ஷன் கார்டு, புகைப்படத்துடன் சாதி சான்றிதழ் மற்றும் பிறந்த தேதி மாற்றம் செய்ய பிறப்பு சான்றிதழ், பாஸ்போர்ட், மதிப்பெண் சான்றிதழ், முகவரி மாற்றம் செய்ய பாஸ்போர்ட், அஞ்சல் நிலைய அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை, ஆயுள் காப்பீட்டு சான்றிதழ், 3 மாதங்களுக்கு உட்பட்ட மின்கட்டண ரசீது, குடிநீர் வரி ரசீது உள்ளிட்ட ஆவணங்களில் ஏதாவது ஒன்றைக் கொண்டு வர வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story