தாராபுரம் அரசு பள்ளியில் ஆதார் புதுப்பித்தல் முகாம்
ஆதார் முகாம்
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட ஐந்து சாலை சந்திப்பு பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் பயின்று வருகின்றனர். தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவுறுத்தலின்படி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன் வழிகாட்டுதலின்படி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் மாணவர்களுக்கு ஆதார் பயோமெட்ரிக் புதுப்பித்தல் மற்றும் கல்வி உதவித்தொகை முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் தாராபுரம் நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன் கலந்து கொண்டு முகாமினை துவக்கி மேலும் இந்நிகழ்ச்சியில் தொடக்கக் கல்வி அலுவலர் ஜெகதீசன் , மாவட்ட திட்ட அலுவலர் அண்ணாதுரை, வட்டார கல்வி அலுவலர் 1 சுசீலா, வட்டார கல்வி அலுவலர் 2 ஈஸ்வரமூர்த்தி, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கீதா, வட்டார வள மேற்பார்வையாளர் பொறுப்பு விஜயலட்சுமி முன்னிலையில் நடைபெற்றது.
மேலும் ஏழாவது வார்டு நகர் மன்ற உறுப்பினர் எஸ். எம். யூசப் மற்றும் அக்பர் பாஷா ,சர்வேயர் இளங்கோவன், ஏ.எம்.யூசப் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.