பள்ளி மாணவர்களுக்கான ஆதார் புதுப்பித்தல் முகாம்

திருப்பூரில் பள்ளி மாணவர்களுக்கான ஆதார் புதுப்பித்தல் முகாமை திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் தொடங்கி வைத்தார்.

திருப்பூர், பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவ,மாணவிகளுக்கு அந்தந்த பள்ளிகளில் ஆதார் பதிவு மற்றும் ஆதார் எண் புதுப்பித்தல் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த முகாமினை செல்வராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

இதில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராசன் மற்றும் துணை மேயர் பாலசுப்பிரமணியம், பகுதி செயலாளர்கள் மியாமி அய்யப்பன், மு.க.உசேன், மாநகர அவைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்டதுணைச்செயலாளர் டிஜிட்டல் சேகர், வட்ட செயலாளர்கள் ரமேஷ், நந்தகோபால் மற்றும் கவுன்சிலர் திவாகரன், எல்.பி.எப். மாவட்ட தலைவர் பி.எஸ். பாண்டியன், மகளிர் அணி அமைப்பாளர் கலைச்செல்வி, தொண்டரணி அமைப்பாளர் ஆனந்தி, துணை செயலாளர் மகாலட்சுமி, பள்ளி தலைமை ஆசிரியை ஸ்டெல்லா அமலோற்பவ மேரி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story