திட்டக்குடியில் ஆம் ஆத்மி ஆலோசனை கூட்டம்

திட்டக்குடியில் ஆம் ஆத்மி ஆலோசனை கூட்டம்

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

திட்டக்குடியில் ஆம் ஆத்மி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கடலூர் மேற்கு மாவட்டம் திட்டக்குடி தொகுதி ஆம் ஆத்மி கட்சியின் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் திட்டக்குடி தொகுதியில் மாவட்ட தலைவர் ஞனராஜ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் புதுக்குளம் ரமேஷ் முன்னிலை வகித்தார்.

மண்டல தலைவர் இயன்முறை மருத்துவர் தேவகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மாநில துணை செயலாளர் (ஊரக வளர்ச்சி) கிங்ஸ்டர், கடலூர் கிழக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஷர்மிளா பர்வீன் ரஃபிக், கடலூர் மாவட்ட தலைவர் (மனித உரிமை பிரிவு) சுவாமிநாதன், நெய்வேலி தொகுதி பொருளாளர் அலெக்ஸ் சிறப்பித்தனர்.

மாவட்ட விவசாய அணி தலைவர் வெங்கடேசன், மேற்கு மாவட்ட ஊரக வளர்ச்சி பிரிவு செயலாளர் கடவுள், திட்டக்குடி தொகுதி தலைவர் செந்தில், துணைத் தலைவர் ஏகாம்பரம், தொகுதி செயலாளர் பி கே பூமாலை, துணை செயலாளர் வீரராஜன், தொகுதி கல்வி மேம்பாட்டு பிரிவு செயலாளர் புலிகேசி, தொகுதி பொருளாளர் ராஜேந்திரன்,

தொகுதி மனித உரிமை பிரிவு செயலாளர் ஜெகநாதன், தொகுதி ஊரக வளர்ச்சி பிரிவு செயலாளர் ஆசைத்தம்பி, தொகுதி இளைஞரணி செயலாளர் கோபி, மகளிர் அணி செயலாளர் மீனா பத்மநாதன், ஒன்றிய மகளிர் அணி செயலாளர் அனிதா வீரராஜன், மங்களூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வேலாயுதம், மங்களூர் தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், நல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன் மற்றும் பலர் திட்டக்குடி தொகுதி சார்பில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story