ஆத்தூர் : ஸ்டாலின் பிறந்தநாள் 820 நபருக்கு குக்கர் வழங்கல்
குக்கர் வழங்கல்
ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட 13 வது வார்டு நகர மன்ற துணைத் தலைவர் கவிதா ஸ்ரீராம் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு வார்டு பகுதியில் 820 நபர்களுக்கு குக்கர் இலவசமாக வழங்கினார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட 13 வது வார்டு பகுதியில் சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் ஆத்தூர் ஸ்ரீராம் தலைமையில் நகர மன்ற துணைத் தலைவர் கவிதா ஸ்ரீ ராம் இணைந்து திமுக தலைவரும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 820 பயனாளிகளுக்கு குக்கர் இலவசமாக வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் விளையாட்டு அணி துணை அமைப்பாளர் ஆவின் செல்வமணி,வார்டு பகுதியில் உள்ள திமுகவினர். பகுதி மக்கள் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
Tags
Next Story