ஆத்தூர் : பைத்தூர் புதூரில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க பூமி பூஜை
ஆத்தூர் ஒன்றியத்திற்குட்ட பைத்தூர் புதூர் பகுதியில் ₹16 லட்சம் மதிப்பீட்டில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க எம்எல்ஏ தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பைத்தூர் புதூர் பகுதியில் அப்பகுதி மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க எம்எல்ஏவிடம் கோரிக்கை மனு அளித்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ₹16 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைப்பதற்கான பூமி பூஜை சட்டமன்ற உறுப்பினர் ஜெய்சங்கரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழகச் செயலாளர் சேகர், ஒன்றிய பொருளாளர் பைத்தூர் சதாசிவம், அறங்காவலர் குழு தலைவர் ஜெயபால், பைத்தூர் ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி செயலாளர், சக்திவேல் 5வது வார்டு உறுப்பினர் பிரபாகரன, 6,வது உறுப்பினர் வசந்தி மாயக்கண்ணன் மற்றும் மகளிரணி, இளைஞரணி, இளம்பெண்கள் பாசறை,கழக நிர்வாகிகள் கழக முன்னோடிகள்,பொதுமக்கள் தகவல் தொழில்நுட்ப பிரிவு, செல்வமணி உள்ளிட்டவர்கள் லந்து கொண்டனர்.
Next Story