ஆத்தூர் : EPS க்கு விவசாயிகள் பாராட்டு தெரிவிப்பு

ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் விவசாயிகளின் நீண்ட நாள்திட்டத்தை கொண்டு வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு விவசாயிகள் சார்பில் ஏத்தாப்பூரில் பாராட்டு விழா. சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெயசங்கரன் பங்கேற்பு
10 ஆண்டுகால கோரிக்கையான கைக்கான் வளைவு கால்வாய் திட்டம் பயன்பாட்டுக்கு வருவதால், ஆண்டுதோறும் கரியக்கோயில் அணை நிரப்புவதற்கு வழிவகை ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, கரியக்கோயில் ஆற்றில் ஆண்டு முழுவதும் நீா்வரத்தும் வெள்ளப்பெருக்கும் ஏற்படும். இதனால், நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்து ஆண்டு முழுவதும் பாசன வசதி கிடைக்கும் என்பதால், கரியக்கோயில் அணை வாய்க்கால் பாசனம் மற்றும் ஆறு ஏரிப்பாசன விவசாயிகள் மட்டுமின்றி 50-க்கும் மேற்பட்ட ஆற்றுப்படுகை கிராம மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ள விவசாயிகள் இந்தத் திட்டத்தை விவசாயிகளுக்காக கொண்டு வந்த எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு ஏத்தாப்பூரில் விவசாயிகள் பாராட்டு விழா நடைபெற்றது இந்த விழாவில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெய்சங்கரன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் விவசாயிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story