ஆத்தூர்: சாலையோரம் பள்ளத்தில் அரசு பேருந்து சாய்ந்து விபத்து

ஆத்தூர் அருகே எதிரே வந்த வாகனம் மீது மோதாமல் இருக்க, அரசு பேருந்து இடது பக்கம் திருப்பியபோது, பள்ளத்தில் சாய்ந்து விபத்து உண்டானது.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து ராமமூர்த்தி நகர் பகுதிக்கு 22 நெம்பர் அரசு பேருந்து ஆத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து ராமமூர்த்தி நகருக்கு சென்று கொண்டிருந்தது அப்போது கல்பகனூர் கிராமத்தை தாண்டி பனந்தோப்பு பகுதி வழியாக சென்ற போது எதிரே வந்த பால் வண்டி மீது மோதாமல் இருக்க அரசு பேருந்து ஓட்டுனர் சாலையோரமாக பேருந்தை இடது பக்கம் திருப்பும்போது எதிர்பாராத விதமாக சாலையோரம் பள்ளத்தில் அரசு பேருந்து சாய்ந்து விபத்துக்குள்ளானது.

மேலும் அப்பகுதியில் பனைமரம் இருந்ததால் பேருந்து முழுவதும் சாயாமல் மரத்தின் மீது சாய்ந்த்து காலை நேரம் என்பதாலும் பயணிகள் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது..

Tags

Read MoreRead Less
Next Story