ஆத்தூர் : நகராட்சி முன் சாலையோர வியாபாரிகள் சாலை மறியல்

ஆத்துார்; தள்ளுவண்டி கடைகளுக்கு சாலையோர வியாபாரிகள் கடை நடத்த நகராட்சி நிர்வாகம் அனுமதி மறுக்கப்படுவதால் வியாபாரிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் கடைகளை அமைத்து தங்களது வாழ்வாதாரத்தை நம்பி வாழ்ந்து வருகின்றார். இந்நிலையில் ஆத்தூர் நகராட்சி அலுவலகம் அருகில் ராணிப்பேட்டை பகுதியில் 20க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் தள்ளுவண்டி கடைகள் அமைத்து வணிகம் செய்து வருகின்றனர். நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள கடைகளை வைக்க அனுமதி மறுக்கப்படுவதாகும், இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் கூறி நகராட்சியை கண்டித்து திடீரென நகராட்சி முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக அதிமுக நகர செயலாளர் மோகன் உள்ளிட்ட கட்சியினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட வேட்பாளர் பேச்சுவார்த்தை ஈடுபட்டு சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Tags

Next Story