ஆத்தூர்: வாகன விபத்தில் வாலிபர் பலி
ஆத்தூர் சமத்துவபுரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றவர் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் சுரேஷ் (40) இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனியார் ஹோட்டலில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் வேலை செய்து வருகிறார் இந்த நிலையில் அவரது சொந்த ஊரான காட்டுக்கோட்டையில் இருந்து சொந்த பணிக்காக அவரது இருசக்கர வாகனத்தில் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பிய போது சமத்துவபுரம் பகுதியில் சாலையை கடக்க முயன்றுள்ளார்.
அப்போது ஆத்தூரில் இருந்து தலைவாசலை நோக்கி சென்ற சரக்கு வாகனம் இரு சக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் இருசக்கர வாகனத்தில் சென்றவரின் வலது கால் முறிந்து குண்டான நிலையில் சம்பவ இடத்திலேயே வாலிபர் உயிர் இழந்தார், தகவல் அறிந்த வந்த ஆத்தூர் ஊரக போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,
Next Story