கெங்கவல்லியில் அனுமதியின்றி தனியார் நடத்திய ஆவின் பாலகத்திற்கு பூட்டு

கெங்கவல்லியில் அனுமதியின்றி தனியார் நடத்திய ஆவின் பாலகத்திற்கு சேலம் ஆவின் மாவட்ட வருவாய் அலுவலர் பூட்டு போட்டுள்ளார்.
கெங்கவல்லி:கெங்கவல்லி பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில், கெங்கவல்லியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சுரேஷ் என்பவருக்கு ஆவின் பாலகம் வைப்பதற்கு முறையாக, சேலம் ஆவின் நிர்வாகத்தின் சார்பாக அனுமதி வழங்கப்பட்டது. தற்போது ஆவின் பாலகத்தை முறையாக நடத்தாமல், அதனை சுரேஷ் தனியார் வேறொருவர் பெயரில் காபிபார் நடத்தி வந்துள்ளார். இந்த தகவல், அவின் சேலம் மாவட்ட ஆவின் வருவாய் அலுவலர் மற்றும் பொது மேலாளருக்கு புகார் சென்றது. இதைய டுத்து 3 முறை மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும்பொது மேலாளர் அருள் ஆனந்தம் தலைமையில், ஆவின் நிர்வாகத்தின் அனுமதி பெற்று, கடை நடத்த வேண்டும் என எச்சரிக்கை செய்தனர். ஆனால், அதை பொருட்படுத்தாமல், தனி யார் நிறுவனம் காபிபார் நடத்தி வந்தது. இதையடுத்து நேற்று, சேலம் ஆவின் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் பொது மேலாளர் அருள் ஆனந்தம் தலைமையில், ஆவின் பாலகத்தை தனியாரிடம் இருந்து பெற்று கடையை பூட்டினார். இதற்கு மேல் கடை அவ்விடத்தில் நடத்தினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்ப டும் என எச்சரிக்கை செய்துள்ளனர்.

Tags

Next Story