புதிய கலெக்டர் அலுவலகத்தில் குறைத்தீர்வு நாள் கூட்டம்
செங்கல்பட்டு மாவட்ட வாராந்திர மக்கள் குறைதீா் நாள் கூட்டம் புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைந்துள்ள கூட்டரங்கில் நடைபெறும் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டம் பழைய மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், செங்கல்பட்டு வெண்பாக்கம் பகுதியில் புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் கட்டப்பட்டது. இதையடுத்து, மாவட்ட தலைமை அலுவலகங்கள் புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்துக்கு மாற்றப்பட்டன. இந்த நிலையில், ஏற்கெனவே பழைய இடத்தில் இயங்கி வந்த மாவட்ட ஆட்சியரின் அலுவலகம் புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்துக்கு மாற்றப்பட்டது. இதைத் தொடா்ந்து, இதுவரை பழைய மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்று வந்த மாவட்ட ஆட்சியரின் வாராந்திர மக்கள் குறைதீா் நாள் கூட்டம் இன்று திங்கள்கிழமை (ஜன. 29) முதல் புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story