வேலூரில் குறைத்தீர்வு நாள் கூட்டம்

வேலூரில் குறைத்தீர்வு நாள் கூட்டம்

மனுக்களை பெற்ற ஆட்சியர்

வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டத்தில் 457 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி, பொதுமக்களிடம் 457 கோரிக்கை மனுக்களை பெற்றார். வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி, தலைமையில் நடைப்பெற்றது.

மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய்த்துறை நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை வேளாண்மைத்துறை, காவல்துறை. ஊரக வளார்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சித்துறை, கூட்டுறவு கடனுதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சர்பாக வீடுகள் வேண்டி, மின்சாரத்துறை சார்பான குறைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை. மருத்துவத்துறை, கிராம பொதுப்பிரச்சனைகள்,

குடிநீர்வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 457 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் காதுகேளாதோர் மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகள் கை, கால் இயக்க குறைபாடுடையோர் மற்றும் மனவளர்ச்சிக்குன்றிய நபர்களுடைய பெற்றோர்களுக்கு தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின்கீழ் தலா ரூ.6400/- மதிப்பில் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 64,000/- மதிப்பில் 10 தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

Tags

Next Story