ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 3 பவுன் நகை அபேஸ்
கோப்பு படம்
சேலத்தில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 3 பவுன் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூர் பகுதியை சேர்ந்தவர் சாந்தி (வயது 57). இவர் கடந்த 29-ந் தேதி சேலம் பழைய பஸ் நிலையத்துக்கு வந்தார். பின்னர் அவர் அங்கிருந்து டவுன் பஸ்சில் அஸ்தம்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார். பஸ் காந்தி ரோடு அருகே சென்றபோது சாந்தி தனது கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகையை காணவில்லை.
கூட்ட நெரிசலை பயன்படுத்தி சாந்தியிடம் இருந்து நகையை மர்ம நபர் அபேஸ் செய்துள்ளார். இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags
Next Story