சேந்தமங்கலத்தில் அப்துல் கலாம் பிறந்த நாள் - நலத்திட்டங்கள் வழங்கல்
நலத்திட்டங்கள் வழங்கல்
சேந்தமங்கலத்தில் அப்துல் கலாம் நண்பர் குழு சார்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 93 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு அப்துல் கலாம் நண்பர் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ராஜா தலைமை தாங்கினார்.
விழாவில் அட்மா குழு தலைவர் அசோக்குமார் சேந்தமங்கலம் டவுன் பஞ்சாயத்து துப்புரவு பணியாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும், முதியோர் இல்லத்திற்க்கும் அரிசி, மளிகை பொருட்கள், பெஜ்ட் உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கினார்.
விழாவில் அட்மா குழு துணைதலைவர் தனபாலன், டாக்டர் பாலாஜி, விக்ரம் ரசிகர் மன்ற தலைவர் ஸ்டாலின், மாவட்ட சிலம்ப ஆசான் சங்க தலைவர் ராஜேந்திரகுமார், செயலாளர் கார்த்திகேயன், வார்டு கவுன்சிலர் விஜயன் மற்றும் அப்துல் கலாம் நண்பர் குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
Next Story