அப்துல் கலாமின் கல்லூரி பேரசிரியர் மறைவு
அப்துல்கலாமுடன் சின்னத்துரை
திண்டுக்கல்லில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ பி ஜே அப்துல் கலாமின் கல்லூரி பேரசிரியர் சின்னத்துரை தனது 101 வது வயதில் இன்று இயற்கை எய்தினார்.
திண்டுக்கல்லில் இயேசு சபையினரால் துறவறம் செல்ல விரும்பும் கிறிஸ்துவ மாணவர்களுக்கு இறையியல் கல்வி கற்பிக்கப்படுகிறது. கல்லூரியில் கடந்த 30 ஆண்டுகளாக பேராசிரியராகவும் பணியாற்றி வந்துள்ளார். இவர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் கல்லூரி பேராசிரியர் ஆவார். இவரை காண இரண்டு முறை திண்டுக்கல் பெஸ்கி கல்லூரிக்கு அப்துல் கலாம் வந்துள்ளார் . அருட்தந்தை சின்ன துரை திருச்சி தூய வளனார் கல்லூரியில் இயற்பியல் பட்டம் பெற்று பின் அதே கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியவர் இவரின் சிறந்த மாணவராக அப்துல் கலாம் விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. பின் திண்டுக்கல் பெஸ்கி கல்லூரியில் 30 ஆண்டு காலம் இறையியல் பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.
Next Story