பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் வருடாபிஷேகம்
வருசாபிஷேகம்
பெரம்பலூரில் உள்ள பிரசித்தி பெற்ற பிரம்மபுரீஸ்வரர் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோவிலில் கும்பாபிஷேகம் செய் யப்பட்டு 18-வது ஆண்டு நிறைவையொட்டி வருடாபிஷேக விழா தர்ம பரிபாலன சங்கம் சார்பில் நேற்று விமரிசையாக நடைபெற்றது.
இதையொட்டி விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், ஸ்நபன பூஜையும், அதனைத் தொடர்ந்து பஞ்ச மூர்த்திகள் உள்பட அனைத்து உற்சவர் திருமேனிகளுக்கு பால், பழங்கள், வாசனை திரவியங்களைக் கொண்டு அபிஷேகமும் நடை பெற்றது . இதைத் தொடர்ந்து சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு மங்கள் வாத்தியம் முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது.
மேலும் விநாயகர், ஈசன், அம்பாள், முருகன் உள்ளிட்ட அனைத்து மூலவர் திருமேனிகளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது. பூஜைகளை கோவில் அர்ச்சகர் கவுரிசங்கர் மற்றும் பிரசாத் சஞ்சவீ ஆகியோர் நடத்தினர்.
விழாவில் கோவில் செயல் அலுவலர் கோவிந்தராஜன், முன் னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், சிவத்தொண்டர்கள் ராஜமாணிக்கம், கார்த்திகேயன் மற்றும் சிவனடியார்கள் வார, தின, வழிபாட்டு குழுவினர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.