தொண்டை மண்டல ஆதிசைவ வேளாளர் சங்கம் சார்பில் அண்ணாமலையார்க்கு அபிஷேகம்

தொண்டை மண்டல ஆதிசைவ வேளாளர் சங்கம் சார்பில் அண்ணாமலையார்க்கு  அபிஷேகம்

சீர்வரிசை எடுத்து வந்த பக்தர்கள் 

திருவண்ணாமலையில் அமைந்துள்ள உண்ணாமலை சமேத அண்ணாமலையாருக்கு தொண்டை மண்டல ஆதிசைவ வேளாளர் சங்க மரபினர் சார்பில் உச்சிக்கால கட்டளை அபிஷேகம் ஆண்டு முழுவதும் 365 நாட்களும் கடந்த பல நூறு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அதை தொடர்ந்து தொண்டை மண்டல ஆதி சைவ வேளாளர் சங்கம் சார்பில் தீபத்திருநாள் முன்னிட்டு மரபினர் சார்பில் 50 அபிஷேகப் பொருட்களை மற்றும் சீர்வரிசை பொருட்களையும் மேள தாளங்கள் முழங்க ராஜ கோபுரம் வழியாக எடுத்துச் சென்று பஞ்ச மூர்த்திகளும் அபிஷேகம் செய்யப்பட்டது. சங்கத்தின் கௌரவ தலைவர் தர்மலிங்கம்,தலைவர் தில்லை பாஸ்கர், செயலாளர் புருஷோத்தமன், பொருளாளர் கார்த்திகேயன் ஆகியோரது வழிகாட்டுதலில் நிகழ்ச்சி நடைபெற்றது.

Tags

Next Story