ஒரு லட்சம் லிட்டர் பாலில் கோபிநாத சாமிக்கு அபிஷேகம்

ஒரு லட்சம் லிட்டர்  பாலில்  கோபிநாத சாமிக்கு அபிஷேகம்

பாலபிஷேகம் 

கன்னிவாடி அருகே கோபிநாத சாமி கோவிலில் ஒரு லட்சம் லிட்டர் பாலில் அபிஷேகம் நடைபெற்றது.
திண்டுக்கல் கன்னிவாடி அருகே உள்ளது கோபிநாத் சாமி கோயில். தரைத்தளத்தில் இருந்து 1023 படிகள் உள்ளன. இங்கு கோபிநாத சாமி குழந்தை வடிவாக அவதரித்துள்ளார். இந்த மலை சாமிக்கு வாரம்தோறும் சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடக்கும். மார்கழி மாதம் முழுவதும் பூஜைகள் நடக்கும். ஏராளமான மாடுகளை நேர்த்திக் கடனாக இந்த மலைக்கு நேர்ந்து விடுவார்கள். இந்த மாடுகள் அனைத்தும் கோயில் நிர்வாகத்திற்கு கட்டுப்பட்டது.இந்நிலையில் நேற்று மாட்டுப்பொங்கலை முன்னிட்டு காலை முதலில் சிறப்பு பூஜைகளும் அபிஷேக ஆராதனைகளும் நடந்தன. கோபிநாதசாமிக்கு ஒரு லட்சம் லிட்டர் பால் அபிஷேகம் செய்யப்பட்டது.

Tags

Next Story