நீக்கப்பட்ட தொழிலாளர் சட்டங்கள் மீண்டும் கொண்டுவரப்படும் - பொன்குமார்
சர்வதேச தொழிலாளர் நினைவு தின பேரணி
திருச்சி மாவட்டம் லால்குடியில் சர்வதேச தொழிலாளர் நினைவு தினம் தொழிலாளர் கட்சி சார்பில் பேரணி நடைபெற்றது .இப்பேரணி லால்குடி ரவுண்டானாவில் தொடங்கி பூவாளூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நிறைவடைந்து .பின்னர் திருமண மண்டபத்தில் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் மாநில துணை பொதுச்செயலாளர் ஜெய் செல்வம் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் ஜான் பீட்டர் அறிவொளி நாகராஜன் ஆகியோர்கள் முன்னிலையில் வகித்தனர்.
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன் குமார் பேரணியை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றி பேசியதாவது உலகம் முழுவதும் பாதுகாப்பு இலலாத பணிகள் மற்றும் சுகாதாரம் இல்லாத பணிகள் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் அடிப்பட்ட அந்த தொழிலாளர்களை நினைவுகூர்ந்து பாதுகாப்பான தொழிலை உறுதிப்படுத்திடும் நோக்கோடு ஏப்ரல் 28 ஆம் நாளை உலகத் தொழிலாளர்கள் தினத்தை சர்வதேச தொழிலாளர் நினைவு நாளாக ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டிருக்கிறது இந்த நாளை இன்றைக்கு உலகத்தில் இருக்கிற உழைக்கிற மக்கள் இப்படிப்பட்ட பேரணிகள் பொதுக்கூட்டங்கள் மூலம் தங்களுடைய பணி பாதுகாப்பினை உறுதி செய்து கொள்ளக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள்.
குறிப்பாக பாதுகாப்பில்லாத பணி என்பது குறிப்பாக கட்டுமான தொழில் என்பது அந்தரத்தில் வேலை செய்யக்கூடியது. சாரம் சரிந்தால் தொழிலாளி இறந்து போகக்கூடிய நிலை இருக்கிறது. ஆகவே வேலை செய்வதற்கு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். அதேபோல சுகாதாரமற்ற சூழ்நிலையில் வேலைகள் செய்வதை தவிர்க்க வேண்டும். வேலை செய்வதற்கு பாதுகாப்பு சுகாதாரமான சூழ்நிலை இருக்கணும். எல்லாவற்றுக்கும் மேல் தரமான வேலை டீசல் ஒர்க் இந்த தரமான வேலை உறுதி செய்ய சுகாதாரத்தையும் தரவேண்டிய பொறுப்பு அரசு மற்றும் அரசு நிறுவனங்களுக்கு உண்டு எனவே அது உறுதிப்படுத்துகிற நோக்கில் தான் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.இன்றைக்கு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் மூலம் கட்டுமான தொழிலாளர்களுக்கு ஹெல்மெட் கொடுத்திருக்கிறோம்.
இவற்றையெல்லாம் தொழிலாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வேலை செய்யும் போது குறைந்தபட்சம் தொழிலாளர்கள் ஹெல்மெட் ஷூவோடு வேலை செய்ய வேண்டும். அதை அனைத்து நிறுவனத்தினுடைய பொறுப்பாளர்களும் உறுதி செய்ய வேண்டும்.நாங்கள் தொழிலாளர் துறையின் சார்பில் அதை வலியுறுத்தி வந்து கொண்டிருக்கிறோம். அதேபோல தரமான வேலையை உறுதி செய்ய வேண்டிய கடமையும் பொறுப்பும் எல்லோருக்கும் இருக்கிறது. இன்றைக்கு பருவநிலை மாற்றம் உள்ளது. அதனால் கூடியிருக்கிற வெப்பநிலை இந்த வெப்ப தாக்கத்தின் காரணமாக மிகப்பெரிய அளவில் தொழிலாளர் வர்க்கம் பொதுவாக அமைப்புச் சாரா தொழிலாளர்கள் பெரிய அளவில் பாதிப்பு அடைந்துள்ளனர்.
மற்ற தொழிலாளர்கள் அறைக்குள் உட்கார்ந்து வேலை பார்க்கிறார்கள். இந்த வெப்ப தாக்கம் பல்வேறு வகையான விளைவுகளை அவர்கள் உடலில் ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு இருக்கிறது.எனவே நீங்கள் இன்றைக்கு நம்முடைய அரசு சுகாதார தொழிலாளர் துறையின் சார்பில் கூட ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். கடுமையான மதிய வெயில் நேரத்தில் தொழிலாளர் வேலை செய்யக்கூடாது .காலையில 12 மணிக்குள் வேலை முடித்துக் கொள்ள வேண்டும். பிற்பகல் 3 மணிக்கு மேல் வேலை செய்யக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாக்கி நேரத்தை கண்டிப்பாக உறுதி செய்ய வேண்டும். நடு வெய்யில் நேரத்தில் அவர்கள் வேலை செய்வதை தடுக்க வேண்டும். அதேபோல தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான சட்டங்கள் எல்லாம் ஒன்றியத்தில் மோடி அரசால் பிரதமராக வந்த பிறகு 44 சட்டங்களை சுருக்கி ஒடுக்கி முதலாளிகளுக்கு ஆதரவாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக நான்கு கோடுகளாக மாற்றியிருக்கிறார்கள். அந்த சுருக்கிய நீக்கிய ஒடுக்கிய சட்டங்கள் எல்லாம் மீண்டும் கொண்டுவர வேண்டும்.
அதுதான் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பானது. எனவே அந்த சட்டங்களை மீண்டும் கொண்டு வர ஒரு நாளில் தொழிலாளர்கள் உறுதியெடுப்பார்கள் அதேபோல தேர்தலிலும் அவருடைய எண்ணத்தை வாக்குமூலமாக பதிவு செய்து ஜனநாயகத்தை காக்கக்கூடிய தொழிலாளர்களை மதிக்கக்கூடிய மனித நேயத்தை மனித உரிமையை நிலைநாட்ட கூடிய ஒரு அரசாங்கத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிற அந்த உணர்வோடு தான் தமிழ்நாட்டில் அப்படி ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படுமேயானால் இழந்த தொழிலாளர்களுக்கான சட்டங்களும் உரிமைகளும் மீண்டும் பெறப்படும்.
அதை நோக்கி உழைக்கிற மக்கள் இந்த சர்வதேச தொழிலாளர் நினைவு நாளில் உறுதி எடுத்துக் கொள்கிறார்கள். தமிழக அரசு வந்து தொழிலாளர்களுக்கு என்னென்ன பாதுகாப்பு கொடுத்திருக்காங்க திருமணத்துக்கு இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் கட்டுமான தொழிலாளர் உள்ளிட்ட 18 வகையான அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வாரியங்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் நடைபெறுகிறது. எல்லா வேலையும் செய்வதற்கு அரசாங்கத்தில் எல்லா அறிவிப்புகளையும் வெளியிடுவதற்கு தடை விதித்திருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்வில் மாநில மகளிர் அணி தலைவர பூங்கோதை மாநில பொருளாளர் சசிகலா மாநில மகளிர் துணைத் தலைவர் ஆனந்த ஜோதி லால்குடி நகர ஒன்றிய நிர்வாகிகள் முரளிதரன் முருகானந்தம் முருகேஷ் ஆறுமுகம் மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர் நிறைவாக திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் முருகதாஸ் நன்றி கூறினார்.