மதுக்கடைகளை அகற்ற வேண்டும் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

மதுக்கடைகளை அகற்ற வேண்டும் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

உறுப்பினர் அட்டை வழங்கும் பேரவைக் கூட்டம் 

அறந்தாங்கி ஒன்றியம் பெருங்காட்டிலுள்ள இரு டாஸ்மாக் மதுக் கடைகளையும் அகற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நடைபெற்ற அக்கட்சியின் ஒன்றிய மற்றும் நகரக் குழுக்களின் கட்சி உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் பேரவைக் கூட்டத்தில், பெருங்காட்டுப்பகுதியில் இயங்கிவரும் இரு டாஸ்மாக் மதுக் கடைகளை நிரந்தரமாக அகற்றவேண்டும். நாட்டுமங்கலம் ஊராட்சி எட்டியத்தளியில் விவசாயிகள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த சாலையில் திடீரென ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். மன்னகுடி ஊராட்சி பிடாரிகாடு கிராமத்தில் பல ஆண்டுகளாக குடியிருக்கும் மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்க வேண்டும். அப்பகுதியில் குடிதண்ணீர் பற்றாக்குறையைப் போக்க வேண்டும். சாலைகளைச் செப்பனிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு நகரச் செயலர் அஜய்குமார் கோஸ் தலைமை வகித்தார். மாநிலத் துணைச் செயலர் நா. பெரியசாமி சிறப்புரையாற்றினார். மாவட்டத் துணைச் செயலர் ஏ. ராஜேந்திரன், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் கே. ராஜேந்திரன் உள்ளிட்டோரும் பேசினர். ஒன்றியச் செயலர் ஆர். ராதாகிருஷ்ணன் வரவேற்றார்.

Tags

Next Story