கடந்த 17ஆம் தேதி கனமழையால் சுமார் 10 லட்சம் குடும்பங்கள் பாதிப்பு

கடந்த 17ஆம் தேதி கனமழையால் சுமார் 10 லட்சம் குடும்பங்கள் பாதிப்பு

10 லட்சம் குடும்பங்கள் பாதிப்பு

மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப 10 நாட்களுக்கு மேல் ஆகும் என தெரியவந்துள்ளது

தூத்துக்குடியில் கடந்த 17ஆம் தேதி கனமழையால் சுமார் 10 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 37 முகாம்கள் அமைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவுகளை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தூத்துக்குடி முத்தம்மாள் காலனி ராஜகோபால் நகர் கதிர்வேல் நகர் பர்மா காலனி முத்தையாபுரம் அத்திமரப்பட்டி சண்முகபுரம் லயன்ஸ் டவுன் உள்பட ஏராளமான இடங்களில் சுமார் 9 அடிக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த தண்ணீரை அகற்றும் பணி நடந்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் மோட்டார் மூலம் தண்ணீரை அகற்றி வருகிறார்கள். இதற்காக மாநகராட்சி சார்பில் 200 மோட்டார்கள் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் மக்களுக்கு அடிப்படை தேவைகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி செய்து வருகிறார். தூத்துக்குடியில் ஐந்து நாட்களாகியும் மழைநீர் வடிகால் பொதுமக்கள் பெரும் அவதியில் உள்ளனர். மேலும் வீட்டு மொட்ட மாடிகளில் தங்கி உள்ளவர்களுக்கு விமானங்கள் மூலம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பல இடங்களில் சமையல் செய்து ஆங்காங்கே தங்கி இருக்கும் மக்களுக்கு உணவுகளை வழங்கி வருகிறார்கள். தூத்துக்குடியில் பெய்த கனத்த மழையால் இதுவரை 32 பேர் பிணமாக மீட்கப்பட்டுள்ளனர். அனைத்து உடல்களும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது .

மேலும் பல பேர் பலியாகி இருக்கலாம் என்று தெரிய வருகிறது. சுமார் 100க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. 2000 கால்நடைகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. தூத்துக்குடியை ஐந்து பிரிவுகளாக பிரித்து அதிகாரிகள் தேவையான வசதிகளை செய்து கொடுத்து வருகிறார்கள். ஆனாலும் இயல்பு வாழ்க்கை இன்றும் திரும்பவில்லை தூத்துக்குடியில் மின்சாரம் 70% வழங்கப்பட்டுள்ளது. முழுமையாக வழங்குவதற்கு மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அமைச்சர்கள் கே.என். நேரு, அனிதா ஆர் ராதா கிருஷ்ணன், கீதாஜீவன் எவ.வேலு ராஜ கண்ணப்பன், சிவசங்கர் ஆகியோர் தூத்துக்குடியில் முகாமிட்டு நிவாரண பணிகளை செய்து வருகிறார்கள். மேலும் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட அரசுத்துறை அதிகாரிகளும் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தேங்கி கிடக்கும் தண்ணீரை கடலுக்கு கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். தூத்துக்குடியில் இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கு இன்னும் பத்து நாட்கள் ஆகும் என்று தெரிகிறது.

Tags

Next Story