வராத பேலட் ஷீட் - அரசு அலுவலர்கள் வாக்குவாதம்

வராத பேலட் ஷீட் - அரசு அலுவலர்கள் வாக்குவாதம்

வாக்குவாதம் 

அரியலுார் மேல்நிலைப்பள்ளியில் தபால் ஓட்டளிக்க 'பேலட் ஷீட்' வராததை கண்டித்து தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ரிஷிவந்தியம் சட்டசபை தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் தபால் ஓட்டளிக்க ஏதுவாக அரியலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாதிரி சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்தொகுதியை சேர்ந்த பலருக்கு தபால் ஓட்டளிக்க 'பேலட் ஷீட்' வரவில்லை.

இதனால் கோபமடைந்த அரசு அலுவலர்கள் நேற்று காலை 11 மணியளவில் பள்ளி வரவேற்பு அறைக்கு முன் நின்று, 'பேலட் ஷீட்' வராத எங்களை எதற்காக தேர்தல் பணிக்கு வர சொல்லி அலைக்கழிக்கிறீர்கள் என கோஷமிட்டு, வாக்குவாதம் செய்தனர். அவர்களிடம் உதவி தேர்தல் அலுவலர் குப்புசாமி, வாணாபுரம் தாசில்தார் குமரன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் பிரச்னை குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததால் , ஊழியர்கள் கலைந்து சென்றனர்.

Tags

Next Story