தல்லாகுளம் காவல் நிலையத்தில் ஆஜராகாத அமலாக்கத்துறை அதிகாரிகள்

தல்லாகுளம் காவல் நிலையத்தில் ஆஜராகாத அமலாக்கத்துறை அதிகாரிகள்

காவல் நிலையம் 

தல்லாகுளம் காவல் நிலையத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆஜராகவில்லை.

திண்டுக்கல்லை சேர்ந்த அரசு மருத்துவர் சுரேஷ் பாபு. இவருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்காமல் தவிர்க்க, ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய மதுரை துணை மண்டல அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியை திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீஸார் கடந்த 1ம் தேதி கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறை உயரதிகாரியின் உத்தரவின்பேரில் மதுரை தபால் தந்தி நகரிலுள்ள அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு மதுரை லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி சத்யசீலன் தலைமையில் அப்பிரிவு போலீஸார் சென்றபோது, அவர்களை அமாலாக்கத் துறையினர் அனுமதிக்க மறுத்து வாக்குவாதம் செய்தனர். பின்பு அமலாக்கத்துறை அலுவலகம் மற்றும் அங்கித்தி வாரியின் வீட்டில் சோதனை நடத்தி ஆவணங்கள் மடிக்கணினி உள்ளிட்ட முக்கிய பொருட்களை கைப்பற்றினார்.

இந்நிலையில், மதுரை துணை மண்டல அமலாக்கத் துறை அலுவலகத்தில் பணிபுரியும் உதவி இயக்குநர் பிரிஜிஷ்ட் பெனிவால், தமிழக டிஜிபிக்கு அனுப்பிய புகாரில், ‘மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்துக்குள் 40 க்கும் மேற்ப்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறை என்று கூறி அத்துமீறி நுழைந்தவர்கள் மீதும், தேவையின்றி ஆவணங்களை திருடி சென்றவர்கள் மீதும் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

அதன்படி அமலாக்க பிரிவு அளித்த புகார் மீது விசாரணை நடத்தும் படி டிஜிபி அலுவலகத்தில் இருந்து மதுரை மாநகர் காவல் ஆணையாளருக்கு இது குறித்து விசாரணை நடத்தி அனுப்பி வைக்க உத்தரவிட்டதை அடுத்து தபால் தந்தி நகர் பகுதியில் உள்ள அமலாக்கப் பிரிவு அலுவலகத்திற்கு கடந்த வாரம் காவல்துறை நேரடியாக சம்மன் கொண்டு சென்றதுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் வாங்க மறுத்தாக கூறப்படுகிறது.

இதனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் டிசம்பர் 26 ஆம் தேதி காலை 11 மணிக்கு தல்லாகுளம் காவல் நிலையத்தில் ஆஜாரகும் படி தபால் மூலம் இரண்டாவது சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதற்காக இன்று மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு ஆஜராகாததால் உயர் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து அடுத்த சமன் அனுப்பப்பட உள்ளதாக தல்லாகுளம் காவல்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story