ஓரிக்கை பணிமனையில் குளிர்சாதன அறை திறப்பு
குளிர்சாதன அறை
ஓரிக்கை எண் 1 பணிமனையில் ஓட்டுனர்கள், நடத்துனர்களுக்கான ஓய்வு அறைக்கு குளிர்சாதன வசதி ஏற்படுத்தப்பட்ட அறை திறக்கப்பட்டது.
தமிழகத்தில் அரசு போக்குவரத்துகழக பணிமனைகளில் உள்ள ஓட்டுனர், நடத்துனருக்களுக்கான ஓய்வு அறைக்கு குளிர்சாதன வசதி ஏற்படுத்த போக்குவரத்து துறை அமைச்சர் அறிவுறுத்தி இருந்தார்.
அதன்படி, தமிழ்நாடு அரசு போக்குரவத்து கழகம், விழுப்புரம் கோட்டம், காஞ்சிபுரம் மண்டலம், ஓரிக்கை எண் 1 பணிமனையில் ஓட்டுனர்கள், நடத்துனர்களுக்கான ஓய்வு அறைக்கு குளிர்சாதன வசதி ஏற்படுத்தப்பட்ட அறை திறப்பு விழா நேற்று நடந்தது. உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் குளிர்சாதன அறையை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், மேயர் மகாலட்சுமி, காஞ்சிபுரம் மண்டல பொது மேலாளர் தட்சணாமூர்த்தி, பொறியாளர் மற்றும் அலுவலர்கள் சங்க பொதுச் செயலர் கருணாகரன், பணிமனை கிளை மேலாளர் முத்துசாமி, தொ.மு.ச., பொதுச் செயலர் ரவி, தலைவர் சுதாகர் உட்பட பலர் பங்கேற்றனர்.
Next Story