வேலூரில் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் பேட்டி
ஏசி சண்முகம் பேட்டி
வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியில் புதிய நீதிக்கட்சியின் சார்பில் கட்சியின் வேலூர் பாராளுமன்ற தொகுதியின் பட்டதாரிகள் அணியின் கூட்டம் அதன் தலைவர் இந்திரநாத். தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் கலந்துகொண்டு பேசினார். இவ்விழாவில் கட்சியின் நிர்வாகிகள் ரமேஷ், குரு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் .பின்னர் ஏ.சி.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறுகையில், மக்களை தேடி மருத்துவர்கள் என்ற முறையில் நாங்கள் இதுவரையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு மருத்துவம் அளித்துள்ளோம் இதே போல வேலூர் பாராளுமன்ற தொகுதியில் வேலைவாய்ப்பை இளைஞர்கள் பெறும் வகையில் வேலூர் குடியாத்தம் ஆகிய பகுதிகளில் முகாம்களை நடத்தினோம் ஆறாயிரம் இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர் ஒரு அரசாங்கம் கூட ஒரு நாளில் இவ்வளவு பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பது சாதாரண காரியம் அல்ல நாங்கள் செய்து இருகின்றோம்.
எங்களுடைய இலக்கு 25 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரவேண்டும் என்று தான் மேலும் முகாம்களை நடத்தவுள்ளோம் மற்ற மதத்திற்கு கொடுக்கும் அங்கீகாரம் இந்து மதத்திற்கு கிடைவில்லை என்று வருத்தம் மேலும் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடக்கவிருக்கிறது. இதில் காஞ்சிபுரத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கலந்துகொள்ள உள்ளதற்கு கூட அனுமதி மறுக்கிறார்.ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பல மாநில அரசுகள் விடுமுறை அளித்துள்ளது. ஆனால், தமிழக அரசு விடுமுறையை அளிக்கவில்லை ஒரு சார்பாக தமிழக அரசு செயல்படுகிறது என்பதனை இதன் மூலம் அறிகிறோம், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ஆனால், அவகாசம் தற்போது இல்லாததால் பாராளுமன்ற தேர்தல் பின்னர் தான் நடத்த வேண்டிய நிலை உள்ளது என்று கூறினார்.