வேட்பு மனு பரிசீலனையில் 18 பேரின் வேட்புமனு ஏற்பு
வேட்பு மனு பரிசீலனை
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்கான வேட்புமனு பரிசீலனையில் 18 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுகொள்ளப்பட்டது.
திண்டுக்கல் பார்லிமென்ட் தொகுதி வேட்பு மனு பரிசீலனையில் 18 பேரின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் பரிசீலனை கூட்டம் நேற்று நடந்தது. திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பொது பார்வையாளர் பிரபுலிங்க் கவாலிகட்டி முன்னிலையில் வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான பூங்கொடி தலைமை வகித்தார்.திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு பெறப்பட்ட 35 வேட்பு மனுக்களில் 18 வேட்பாளர்களின் மனு ஏற்கப்பட்டது. இது குறித்து கலெக்டர் விளக்கமும் அளித்துள்ளார்.
Next Story