தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு
மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தலைமையில் நடந்த தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்வில் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றனர்.
சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் மகாத்மா காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இதற்கு கலெக்டர் டாக்டர் பிருந்தாதேவி தலைமை தாங்கி தீண்டாமை ஒழிப்பு தின உறுதி எடுத்துக்கொண்டார். தொடர்ந்து அரசு அலுவலர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். பின்னர் தியாகிகளை நினைவுகூறும் வகையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டன. தொடர்ந்து தொழு நோய் இல்லாத இந்தியா உருவாக அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி தொழு நோய் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில் கூடுதல் கலெக்டர் அலர்மேல்மங்கை, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story