திமுக,அதிமுக, தமாகா வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்பு

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக, அதிமுக, தமாகா வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டதால் மும்முனை போட்டி உறுதியாகி உள்ளது.

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் பரிசீலனை இன்று மாவட்ட தேர்தல் அதிகாரி லட்சுமிபதி மற்றும் தேர்தல் பொது பார்வையாளர் தினேஷ் செஹரா தலைமையில் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்த திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி, அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி, பாரதிய ஜனதா கட்சி கூட்டணியை சேர்ந்த தமாக வேட்பாளர் எஸ் டி ஆர் விஜயசீலன், ஆகியோரது வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. . இதைத் தொடர்ந்து தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் மும்முனை போட்டி உருவாக்கி உள்ளது.



Tags

Next Story