கடலூரில் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி

கடலூரில் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி

உறுதிமொழி ஏற்பு

கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
கடலூர் மாவட்டம் காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு மேற்கொள்ளப்பட்டது. இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத, உளமார்ந்த பற்றுள்ள இந்திய குடிமகன்/குடிமகள் ஆகிய நான், நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிவேன். தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு எவர்மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல், என்ற எந்தவகையிலும் கடைப்பிடிக்கமாட்டேன் எனவும், அரசியலமைப்பின் அடிப்படைக் கருத்திற்கிணங்க, சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும் உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதையும் உணர்வேன் இந்திய அரசியலமைப்பின்பால் எனக்குள்ள முழுப்பற்றிற்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்குமென்றும் இதனால் உளமாற உறுதியளிக்கிறேன் என உறுதிமொழி ஏற்றனர். உறுதிமொழி ஏற்புக்கு முன்பாக அனைவரும் தியாகிகளுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி மேற்கொண்டனர்.

Tags

Next Story