விபத்தில்லா தீபாவளி - மாணவர்களுக்கு தீயணைப்பு துறை விழிப்புணர்வு
மாணவர்களுக்கு விழிப்புணர்வு
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையம் சார்பில் விபத்தில்லா தீபாவளி, உங்கள் பாதுகாப்பு உங்கள் கையில் பொது மக்களுக்கு துண்டுப்பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு செய்யப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட அலுவலர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித் துறை பானுப்பிரியா ஆலோசனையின்படி பொன்னமராவதி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் பள்ளிக்கூடங்களில் தீபாவளி பண்டிகையின் போது மாணவர்கள் எவ்வாறு பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் போலி ஒத்திகை பயிற்சி செய்து காண்பித்தனர்.மேலும் பொன்னமராவதி அண்ணாசாலை, பேருந்து நிலையம் பகுதியில் தீயணைப்பு நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையிலான வீரர்கள் ஒலிப்பெருக்கி மூலம் சிறுவர்களிடம் வெடிக்கும் பட்டாசுகளை கொடுக்க கூடாது, தடை செய்யப்பட்ட பட்டாசு மற்றும் சீனா பட்டாசுகள் வெடிக்க கூடாது,அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி குறிப்பிடநேரத்தில் பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிக்க வேண்டும், வெடி வெடிக்கும் போது தீவிபத்து ஏற்பட்டால் உடனடியாக தீ கட்டுப்பாட்டு அறை 101 என்ற எண்களை தொடர்பு கொண்டு முழு முகவரி,தொலைபேசி எண்கள், தீ வண்டி விரைந்து வரக்கூடிய பாதை ஆகியவற்றை தெளிவாக தெரிவிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு துண்டுப்பிரசுரத்தை பொதுமக்கள், வியாபாரிகளுக்கு வழங்கி தீயணைப்பு துறை வீரர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.