திண்டுக்கல்லில் பேருந்து மீது மின்கம்பம் உடைந்து விழுந்து விபத்து
திண்டுக்கல்லில் இருந்து சிறுநாயக்கன்பட்டி வரை செல்லும் தனியார் மினி பேருந்து மின் கம்பத்தில் உரசி விபத்து ஏற்பட்டது.
திண்டுக்கல் மேட்டுப்பட்டி, மொட்டணப்பட்டி சாலையில் திங்கட்கிழமை மதியம் 12 மணியளவில் திண்டுக்கல்லில் இருந்து சிறுநாயக்கன்பட்டி வரை செல்லும் தனியார் மினி பேருந்து மின் கம்பத்தில் உரசி விபத்துங் ஏற்பட்டது.
பேருந்தில் இருந்த பயணிகளுக்கு அதிர்ஷ்டவசமாக எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. உடனடியாக மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
Next Story