மின்கம்பத்தில் கட்டுப்பாட்டை இழந்து மோதிய கார்
கன்னியாகுமரி மாவட்டம், குளைச்சலில் கட்டுபாட்டை இழந்த கார் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
குமரி மாவட்டம் குளச்சல் - திங்கள் நகர் சாலையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்திருக்கும். இந்த நிலையில் நேற்று மாலையில் காப்புக்காடு பகுதியில் இருந்து குளச்சல் வழியாக நாகர்கோவிலுக்கு சென்ற ஒரு சொகுசு கார் மதுபான கடை அருகில், திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறா ஓடியது.பின்னர் சாலையோரம் நின்ற மின் கம்பத்தில் மோதி அருகில் நிறுத்தப்பட்டிருந்த வேன், காரில் மோதியதில் சேதம் அடைந்தது. மேலும் மின்கம்பம் முறிந்து தொங்கியது. உடனே மின்தடை ஏற்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது. நேற்று தைப்பூசம், வள்ளலார் தினத்தை முன்னிட்டு மதுபான கடை விடுமுறை என்பதால் மது பிரியர்களின் கூட்டம் இல்லை. இதனால் பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது. காரை ஓட்டி எந்த டிரைவர் பழனிக்குமாருக்கு (52) சிறிது காயம் ஏற்பட்டது. குளச்சல் மின்வாரிய ஊழியர்கள் விரைந்து புதிய மின் கம்பம் நட்டனர். இதனால் 4 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.
Next Story