மேட்டூரில் சாலையில் தடுப்பு சுவரில் லாரி மோதி விபத்து

மேட்டூரில் சாலையில் தடுப்பு சுவரில் லாரி மோதி விபத்து

விபத்து 

சேலம் மாவட்டம்,மேட்டூரில் சாலையின் தடுப்பு சுவரில் லாரி மோதி ஏற்பட்ட விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேட்டூர் அருகே தொட்டில் பட்டியில் சாலையின் தடுப்பு சுவரில் லாரி மோதி விபத்து. மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து ,கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு இயந்திர உதிரி பாகங்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜா (35) என்பவர் ஒட்டி வந்தார்.

விடியற்காலை 4 மணி அளவில் லாரி மேட்டூர் அருகே தொட்டில் பட்டி வந்தபோது சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியின் முன் பகுதி சேதம் அடைந்தது ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் லாரி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

சாலையை அகலப்படுத்தாமல் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டதாலும், தடுப்புச் சுவரில் சிகப்பு விளக்கு பொருத்தப்படாமல் இருந்தாலும் விபத்து ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விபத்து குறித்து அப்பகுதியில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story