உயரமான கான்கிரீட் சிலாப்புகளால் விபத்து அதிகரிப்பு
கான்கிரீட் சிலாப்புகள்
வெள்ளக்கோயில் அருகே மாந்தபுரத்தில் சாலையின் ஓரத்தில் போடப்பட்ட கான்கிரீட் சிலாப்புகள் சாலையை விட உயரமாக உள்ளதால் விபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
வெள்ளகோவில்-முத்தூர் மாநில சாலையில் மாந்தபுரம் உள்ளது. இந்தவழியாக முத்தூர், கொடுமுடி, மொடக்குறிச்சி, ஈரோடு, சிவகிரிக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. மாந்தபுரம் அருகே கொடுமுடி காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் சாலையில் பதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பெரிய குழாய்களில் அண்மையில் உடைப்பு ஏற்பட்டு அந்த இடத்தில் பள்ளம் தோண்டி உடைப்பை குடிநீர் வடிகால் வாரியத்தினர் சரி செய்தனர். அதன்பின்னர் பள்ளத்தை கான்கிரீட் சிலாப்கள் மூலம் மூடப்பட்டது. ஆனால் கான்கிரீட் சிலாப்கள் சாலையில் ஒரு அடி உயரத்துக்கு மேலே இருப்பதால் அவை இருப்பது தெரியாமல் வாகனங்கள் அவற்றின் மீது ஏறி அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே சிலாப்புகளை சாலை மட்டத்தில் வைக்க வேண்டுமென வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story