விபத்து தீவிர சிகிச்சை பிரிவு கட்டுமான பணி தீவிரம்

விபத்து தீவிர சிகிச்சை பிரிவு கட்டுமான பணி தீவிரம்
X
கட்டுமான பணி 
செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் விபத்து தீவிர சிகிச்சை பிரிவு கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தேசிய நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை, மாநில நெடுஞ்சாலை, மாவட்ட சாலைகளில் நிகழும் விபத்துகளில் பாதிக்கப்பட்டோர், செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். பெரிய விபத்துகள் ஏற்பட்டால், அருகில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்தோரும் சிகிச்சைக்கு வருகின்றனர். இதனால், விபத்து தீவிர சிகிச்சை பிரிவு தனியாக ஏற்படுத்த வேண்டும் என, மத்திய, மாநில அரசுகளிடம், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர். தொடர்ந்து, தேசிய மருத்துவ மையம் 2023- - 23ம் நிதியாண்டில், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு, விபத்து தீவிர சிகிச்சை பிரிவு கட்டடம் தனியாக கட்ட, 20 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது.

அதன்பின், மருத்துவமனை வளாகத்தில், 1 ஏக்கர் பரப்பளவில், விபத்து தீவிர சிகிச்சை பிரிவு கட்டடம் கட்டுவதற்கு, இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், தரைதளம், முதல் மூன்று தளங்கள் கட்டப்படுகின்றன. இங்கு, 50 படுக்கை வசதிகளுடன், தரைதளத்தில் விபத்து உள்ளிட்ட தீவிர சிகிச்சைகள், இரண்டாம் தளத்தில், அறுவை சிகிச்சை அரங்கம், மூன்றாம் தளத்தில் செவிலியர்கள், டாக்டர்கள் தங்கும் அறை ஆகியவை அமைகின்றன. இப்பணிக்கு, கடந்த ஆண்டு டெண்டர் விடப்பட்டு, தனியார் ஒப்பந்ததாரர்கள் மார்ச் மாதம் துவங்கிய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Tags

Next Story