ஆரணி அருகே விபத்து- அதிமுக பிரமுகர் பலி !

ஆரணி அருகே விபத்து- அதிமுக பிரமுகர் பலி !

அதிமுக பிரமுகர் பலி

ஆரணியில் தடுப்புச் சுவரில் ஸ்கூட்டர் மோதி அதிமுக பிரமுகர் உயிரிழந்தார் ‌.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஆரணிப்பாளையம் சாந்தா தெருவை சேர்ந்தவர் மினர்வா எஸ்.அண்ணாதுரை, அ.தி.மு.க. மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை பொருளாளர். இவர் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு இரவு ஸ்கூட்டரில் தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மினர்வா எஸ். அண்ணாதுரை பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து ஆரணி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story