மொரப்பூர் அருகே விபத்து - 6 பேர் படுகாயம், மருத்துவமனையில் சிகிச்சை

மொரப்பூர் அருகே விபத்து - 6 பேர் படுகாயம், மருத்துவமனையில் சிகிச்சை
சிகிச்சை 

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் தனியார் ஷூ தயாரிப்பு நிறுவனம் இயங்கி வருகிறது.இந்த நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் காலை வேலைக்கு சென்று விட்டு பணியை முடித்து வீட்டிற்கு வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது சாமாண்டாள்ளி அருகே எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அவசர ஊர்தி மூலமாக மொரப்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து மொரப்பூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Next Story