உவரி அருகே விபத்து : நாகர்கோவிலை சேர்ந்த இருவர் பலி

உவரி அருகே விபத்து : நாகர்கோவிலை சேர்ந்த இருவர் பலி

பைல் படம் 

உவரி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் நாகர்கோவிலை சேர்ந்த இருவர் உயிரிழந்தனர்.

குமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணபிள்ளை(65), கோணம் அரசு ஐடிஐயில் பயிற்றுநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவரது நண்பர் சேகர்(64) இவர் பிளம்பர் வேலை செய்து வந்தார். இருவரும் நேற்று முன்தினம் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றுவிட்டு பைக்கில் நாகர்கோவில் நோக்கி வந்துகொண்டு இருந்தனர்.

அவர்கள் உவரி அருகே வரும்போது பொள்ளாச்சியிலிருந்து காரில் சிவபிரகாசம்(49) மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட 6 பேர் கன்னியாகுமரி சென்று விட்டு திருச்செந்தூருக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது காரின் முன் பக்க டயர் திடீரென வெடித்தது. இதன் காரணமாக காரும், பைக்கும் பக்கவாட்டில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கிருஷ்ணபிள்ளை, சேகர் மற்றும் கார் டிரைவர் மணி(49), காரில் இருந்த சிவபிரகாசம் ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். 4 பேரையும் மீட்டு திசையன்விளையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் கிருஷ்ணபிள்ளை, சேகர் ஆகியோர் நேற்று இறந்தனர். அவர்களது உடல் பிரேதபரிசோதனை செய்யப்பட்டு, நேற்று மாலை சொந்த ஊரான கிருஷ்ணன்கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.

Tags

Next Story