அரவக்குறிச்சி அருகே பைக் குறுக்கே நாய் புகுந்து விபத்து
காவல் நிலையம்
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, ஆலமரத்துப்பட்டி அருகே உள்ள தோப்புப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் வயது 41. இவர் ஏப்ரல் 21 ஆம் தேதி காலை 10 மணியளவில், கரூர் - திண்டுக்கல் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார்.
இவரது வாகனம் ஆண்டிப்பட்டி கோட்டை ஹரிஹரன் ஹோட்டல் அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஒரு நாய் சாலையை கடந்து சென்றதால், தனது வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் சாலையின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள சென்டர் மீடியனில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் குணசேகரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்த குணசேகரன் சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 25ஆம் தேதி உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்த குணசேகரனின் மனைவி சத்தியபாமா வயது 30 என்பவர், இது குறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில்,
சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த குணசேகரின் உடலை திருச்சி அரசு மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அரவக்குறிச்சி காவல் துறையினர்.