மாமியாரை டூவீலரில் அழைத்துச் சென்றபோது விபத்து

அரவக்குறிச்சி தாலுகா, அங்கு நகர் பகுதியில் மாமியாரை டூவீலரில் அழைத்துச் சென்றபோது விபத்து ஏற்பட்டதால் மருமகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, அங்கு நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் மனைவி விஜயலட்சுமி வயது 42. அரவக்குறிச்சி தாலுக்கா, தும்பிவாடியில் வசித்து வந்த, விஜயலட்சுமியின் மாமியார் மணிபாரதி வயது 70-. இவர்கள் இருவரும் மே 13ஆம் தேதி மதியம் 3:30 மணி அளவில், சின்ன தாராபுரத்தில் இருந்து அரவக்குறிச்சி செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். டூவீலரை விஜயலட்சுமி ஓட்ட, மணி பாரதி பின்னால் அமர்ந்து சென்றார்.

இவர்களது வாகனம் ராஜபுரம் செல்வராஜ் டீக்கடை முன்பு சென்ற போது, மாமியார் மணி பாரதி டூவீலரை பிடித்து அமர்ந்து வந்தவர், பிடிமானம் தவறியதால் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மணிபாரதிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விஜயலட்சுமியின் கணவர் சரவணன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை அஜாக்கிரதையாக ஓட்டி விபத்து ஏற்பட காரணமான விஜயலட்சுமி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் சின்ன தாராபுரம் காவல்துறையினர்.

Tags

Next Story