நெடுஞ்சாலைப் பள்ளங்களால் தொடரும் விபத்துக்கள்
கோபால்பட்டி நெடுஞ்சாலையில் பல மாதங்களாக மண் அரிப்பினால் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் தொடரும் விபத்துக்கள்
கோபால்பட்டி நெடுஞ்சாலையில் பல மாதங்களாக மண் அரிப்பினால் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் தொடரும் விபத்துக்கள்
சாணார்பட்டி அருகே கோபால்பட்டி நெடுஞ்சாலையில் பல மாதங்களாக உள்ள மண் அரிப்பினால் ஏற்பட்டுள்ள ஆபத்தான பள்ளங்களால் தொடர் விபத்துக்கள் நடந்து வருகிறது.நத்தம் - திண்டுக்கல் இடையே 38 கி.மீ., தொலைவிலான தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் ரூ.125 கோடி செலவில் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட இந்த சாலையில் மழை பெய்தாலே கன்னியாபுரம், கோபால்பட்டி, நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. பல இடங்களில் முறையாக மழை நீர் வடிகால் அமைக்கப்படாமல் உள்ளது. உடனடியாக சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Next Story