வீடின்றி வாழும் இருளர் குடும்பத்தினர் பள்ளியில் தங்க வைப்பு

வீடின்றி வாழும் இருளர் குடும்பத்தினர் பள்ளியில் தங்க வைப்பு

பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பத்தினர்.


வீடின்றி வாழும் இருளர் குடும்பத்தினர் பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கண்ணமங்கலம் பேரூராட்சி மேநீர் தேக்கத்தொட்டி அருகே சுமார் 50-க்கும் மேற்பட்ட இருளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர்.

தற்போது மிக்ஜம் புயல் மழை காரணமாக ஆரணி ஆர்.டி.ஒ. தனலட்சுமி உத்தரவின் பேரில், தாசில்தார் மஞ்சுளா ஆலோசனைப்படி, மண்டல துணை தலைவர் திருவேங்கடம், கண்ணமங்கலம் வருவாய் ஆய்வாளர் மணிகண்டன், கிராம நிர்வாக அலுவலர் தமிழரசன் ஆகியோர் இருளர் குடும்பத்தினரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கண்ணமங்கலம் முஸ்லிம் நடுநிலைப்பள்ளியில் தங்க வைத்தனர்.உணவு, போர்வை, தலையணை ஆகியவற்றை வழங்கினார்.

Tags

Next Story