குவிந்த தீபாவளி குப்பைகள் - களத்தில் இறங்கிய துணை மேயர்

குவிந்த தீபாவளி குப்பைகள் - களத்தில் இறங்கிய  துணை மேயர்

குப்பை அகற்றும் பணியில் ஈடுபட்ட துணை மேயர் 

நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் நேற்றைய தினம் பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் நேரக்கட்டுப்பாட்டையும் மீறி நாள் முழுவதுமே பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இந்நிலையில் மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் நேற்று தீபாவளியையொட்டி பட்டாசு கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் என 1000 டன் குப்பைகள் சேர்ந்துள்ளன. தற்போது குப்பை மற்றும் பட்டாசு கழிவுகளை அகற்றும் பணியில் மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். அதேபோல் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சார்பில் விளக்குத்தூண் சந்திப்பு, தெற்குமாசி வீதி உள்ளிட்ட ஜவுளிக்கடை வணிக நிறுவனங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட குப்பைகளை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கூட்டாக சேர்ந்து அகற்றினார் இந்த நிகழ்வில் மதுரை மாநகராட்சியின் துணை மேயர் நாகராஜன் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு டன் கணக்கிலான குப்பைகளை அகற்றினார்.

Tags

Next Story