24 மணிநேரத்தில் பிடிபட்ட குற்றாவளி - காவல்துறையினருக்கு குவியும் பாராட்டு

24 மணிநேரத்தில் பிடிபட்ட குற்றாவளி - காவல்துறையினருக்கு குவியும் பாராட்டு

பைல் படம் 

துறையூர் அருகே கோட்டாத்தூரில் பட்டப்பகலில் ஆளில்லாத வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகையை திருடி சென்ற நபரை 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.காவல்துறையினருக்கு இந்த நடவடிக்கைக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கோட்டாத்தூர் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் செங்குட்டுவன். இவரது மனைவி சுகுணாதேவி.கடந்த 11 ந்தேதி காலை 8 மணியளவில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வீட்டை பூட்டிவிட்டு மண்ணச்சநல்லூர் அருகே உள்ள சிறுகாம்பூரில் நடைபெற்ற உறவினரின் இல்ல நிகழ்ச்சிக்காக சென்று உள்ளனர் நிகழ்ச்சியை முடித்துவிட்டு மதியம் 3 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்க்கும் போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் செங்குட்டுவன் மற்றும் அவரது மனைவி சுகுணா தேவி வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 7 சவரன் நகை திருட்டு போனது தெரிய வந்தது இதனைத் தொடர்ந்து சுகுணா தேவி துறையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் அதே பகுதியைச் சேர்ந்த திவாகர் என்பவன் செங்குட்டுவனின் வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடியது தெரியவந்தது. பி

ன்னர் அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர் திருட்டு போன 24 மணி நேரத்தில் திருடனை கண்டுபிடித்த துறையூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் உதவி ஆய்வாளர் ராஜேஷின் திறமையை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Tags

Next Story