தலைமறைவான கொலை வழக்கு குற்றவாளி கைது

தலைமறைவான கொலை வழக்கு குற்றவாளி கைது

கலைச் செல்வன்

திருவாரூரில் கொலை வழக்கு குற்றத்தில் பிணையில் வந்து விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் மூன்றாண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தவரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் அருகே காட்டூர் கிராமத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெட்டி படுகொலை செய்யப்பட்ட முத்துகிருஷ்ணன் என்பவரின் நெருங்கிய நண்பரான கலைச் செல்வன் ஆகரத்திருநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் தனது நண்பர் முத்துகிருஷ்ணன் கொலைக்கு பழிவாங்கும் விதமாக குமரேசன் கொலை வழக்கிற்காக சிறை சென்று நீதிமன்ற பினையில் வெளிவந்த பின்னர் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமுறைவாக இருந்து வந்தார் . குமரேசன் கொலை வழக்கில் இவருக்கு நீதிமன்றம் பிடி கட்டளை பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ளது அதேபோல் கடந்த ஆண்டு குடவாசல் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கஞ்சா கடத்திய வழக்கிலும் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். தொடர்ந்து தலைமறைவாக இருந்தவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்த நிலையில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags

Read MoreRead Less
Next Story