கலா உத்சவ் தனித்திறன் போட்டியில் சாதனை
சாதனை படைத்த மாணவன்
கலா உத்சவ் தனித்திறன் போட்டியில் சாதனை படைத்துள்ளார்.
பட்டிவீரன்பட்டி: மத்திய அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இடையான கலா உத்சவ் தனித்திறன் போட்டிகளில் மாவட்ட அளவில் 3டி சிலை செய்யும் பிரிவில் பட்டிவீரன்பட்டி என். எஸ். வி. வி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 11ம் வகுப்பு மாணவன் ரமேஷ் வெற்றி பெற்றார். சேலத்தில் நடந்த மாநில போட்டியில் பங்கேற்று இரண்டாம் இடம் பெற்று சான்றிதழ்,பரிசு வென்றார்.
மாணவனையும், ஆசிரியர் மாரிசெல்வத்தையும் பள்ளி தலைவர் முரளி, செயலர் நிர்மல்ராஜ், தலைமை ஆசிரியர் செந்தில்குமார், மரகதவேல் பாராட்டினர்.
Tags
Next Story