கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளி மாணவர்கள் சாதனை
மாணவர்கள் சாதனை
கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
தச்சூர் ஆக்சாலிஸ் சி.பி.எஸ்.இ., பள்ளி 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. இப்பள்ளியில் பத்தாம் வகுப்பில் தேர்வு எழுதிய மாணவர் சஞ்சய் 500க்கு 491, மாணவி ஹாசினி பிரியா மற்றும் மாணவர் ரித்விக் ஸ்ரீரங் 484, விபூஷன் 482 மதிப்பெண் பெற்று முதல் 3 இடங்களைப் பிடித்தனர்.
குறிப்பாக, மாணவ, மாணவிகள் 10 பேர் வெவ்வேறு பாடங்களில் சென்டம் மதிப்பெண் பெற்றனர். பிளஸ் 2 மாணவி சுனிதா சவுத்ரி 500க்கு 491, இன்சுவை 478, அக்ஷ்யபாரதி 471 மதிப்பெண் பெற்று முதல் 3 இடங்களைப் பிடித்தனர்.
பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் பாரத்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் ஜாய்ஸ் ரெக்சி ஆகியோர் பாராட்டி, நினைவுப் பரிசு வழங்கினர்.
Next Story