ஆசிட் குடித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

ஆசிட் குடித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

பைல் படம்

சேலத்தில் காதலிக்கு திருமணமான அதிர்ச்சியில் ஆசிட் குடித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சேலம் மாமாங்கம் அண்ணாநகரை சேர்ந்தவர் ஸ்ரீதர் (24), ஐஸ்கிரீம் கடையில் வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன் தினம் ஆசிட் குடித்து வாய் முழுவதும் புண்ணான நிலையில் சேலம் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில், தான் காதலித்த பெண்ணுக்கு ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்த அதிர்ச்சியில் அவர் ஆசிட் குடித்தது தெரியவந்தது. ஓராண்டுக்கு முன்பு அந்த பெண் வீட்டை காலி செய்துவிட்டு சென்றார். அவருக்கு திருமணமானது ஸ்ரீதருக்கு தெரியாது. நேற்று முன்தினம் அந்த பெண் ஸ்ரீதரிடம் பேசியுள்ளார். அப்போது தனக்கு திருமணமாகி விட்டதாகவும் கர்ப்பமாக இருப்பதாகவும் தெரிவித்ததுடன், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளுங்கள் என அவர் கூறியுள்ளார்.

இதனால், காதலித்த பெண் கிடைக்காத வேதனையில் அவர் ஆசிட்டை குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இந்நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை ஸ்ரீதர் உயிரிழந்தார். உண்மையாக காதலித்த பெண் தனக்கு கிடைக்காத வேதனையில் அவர் தன்னுயிரை மாய்த்து கொண்டார். இதுதான் உண்மையான காதல் என அவரது நண்பர்கள் கூறி கண்கலங்கினர். உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு பிறகு உடலை பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags

Next Story